SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மகா புஷ்கர விழாவையொட்டி கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணிக்கு வழிபாடு

2018-09-16@ 20:42:11

அம்பை: தாமிரபரணி மகாபுஷ்கர விழாவை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி அருகே தாமிரபரணி நதிக்கரையில் மாதா தாமிரபரணி அறக்கட்டளை சார்பில் ஆரத்தி பூஜை நடந்தது. தாமிரபரணி மகா புஷ்கர விழா வருகிற அக்.11 முதல் 22ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து தாமிரபரணியின் ஜென்ம நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை தாமிரபரணிக்கு மலர் தூவி, ஆரத்தி நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் டாக்டர்கள் பத்மநாபன், கோமதி அன்னபூரணி, ராஜலட்சுமி, திலகர் பள்ளி ராகவன், சாய்சங்கர், அப்துல் கலாம் நண்பர்கள் குழுவினர், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்