SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டில் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் தகவல்

2018-09-16@ 20:39:29

டெல்லி: நாட்டில் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில், நாட்டில் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்றும் மற்ற மாநிலங்களை விட வட கிழக்கு மாநிலங்களின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிசோரம் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் உள்ளன என்றும் மேகாலயா மாநிலத்தில் உள்ள 41 கிராமங்களில் ஒரு பள்ளிகள் கூட கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவா மாநிலத்தில் உள்ள கிராம பள்ளிகள் பற்றிய விவரம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்