SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மேலூர் அருகே அசத்தல் பனை விதை விதைத்த பள்ளி மாணவர்கள்

2018-09-16@ 20:04:50

மேலூர்: நேச்சர் கிளப்பை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கிராமப்புற கண்மாயில் பனை விதைகளை விதைத்து, அரிதான பறவை இனங்களை காணும் நிகழ்வு மேலூர் அருகே நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள அரிட்டாபட்டி இயற்கை சூழ்ந்த 7 மலை தொடர்கள் கொண்ட பகுதியாகும். இங்கு அரிதாக காணப்படும் பல்வேறு வகையான பறவை இனங்கள் உள்ளது. அவ்வப்போது பறவை ஆர்வலர்கள் இங்கு வந்து  அவற்றை ஆவணப்படுத்தி செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று மதுரை கருப்பாயூரணியில் உள்ள டிவிஎஸ் லட்சுமி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த நேச்சர் கிளப் மாணவர்கள் 40 பேர் அரிட்டாபட்டிக்கு வந்தனர்.

இவர்களுடன் பள்ளி ஆசிரியை கலையரசி, அரவிந்த் கண்மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா கலந்து கொண்டனர்.  ஏழுமலை பாதுகாப்பு செயலாளர் ரவிச்சந்திரன் மாணவர்களுக்கு இயற்கை குறித்து விளக்கி கூறினார். லகுடு வல்லூறு (லாகர் பால்கான்) பறவை மற்றும் கழுகு வகைகள், வைரி போன்ற 50 வகையான பறவைகளை மாணவர்கள் கண்டு களித்தனர். கழுகு மலையடிவாரத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நாட்டு மீன்கள், கீரைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இத்துடன் இளமாத்தான் கண்மாய்கரையில் பனை விதைகளை மாணவர்கள் விதைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்