SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீன எல்லையில் இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை குறையாது: மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

2018-09-16@ 19:29:24

டெல்லி: சீன எல்லையில் இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை குறைத்துக் கொள்ளப்பட மாட்டாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நிர்மலா சீதாராமன்,  இந்திய - சீன எல்லையில் அமைதி நிலவுவது,  வுஹானில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்த போது பேசப்பட்ட அம்சங்கள் நடைமுறைக்கு  வருவதைப் பொறுத்தே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

வூஹான் சந்திப்பின் போது, இந்திய - சீன எல்லையில் இருதரப்பு ராணுவத்தினரும் அமைதியைப் பேணுவதென தீர்மானிக்கப்பட்டதையும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார். அது நடைபெறும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், எல்லையில் ராணுவம் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே தமது கருத்து எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்