SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் மார்க்கெட்டுக்கு ஆந்திரா சாத்துக்குடி வரத்து அதிகரிப்பு

2018-09-16@ 19:27:39

சேலம்: ஆந்திராவில் ராஜமுந்திரி, கடப்பா, நந்திமண்டல், நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் விற்பனைக்கு  அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட, வரத்து அதிகரித்துள்ளது.  இதுகுறித்து சேலம் கடைவீதி மொத்த சாத்துக்குடி வியாபாரிகள் கூறுகையில், ‘ஆந்திராவில் கடந்த ஒரு மாதமாக சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 டன் சாத்துக்குடி விற்பனைக்கு  வரும். சில நாட்களாக 50 டன்னுக்கு மேல் விற்பனைக்கு வருகிறது. எதிர்வரும் வாரத்தில் இதன் வரத்து 70 முதல் 80 டன்னாக இருக்கும். தற்போது அளவு பொறுத்து ஒரு கிலோ (மொத்த விலையில்) சாத்துக்குடி ₹20 முதல்  ₹60 வரை விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்