SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்: சிகிச்சைக்கு அனுப்ப மறுத்து தகராறு

2018-09-16@ 19:06:11

வத்திராயிருப்பு: சமூக வலைத்தளத்தை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர், பின்னர் குழந்தை, மனைவியை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்து தகராறு செய்ததால் வத்திராயிருப்பு அருகே பரபரப்பு ஏற்பட்து. மதுரை மாவட்டம், திருமங்கலம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முகமது தாஜூதீன்(29). இவரது மனைவி அன்சுல் பாத்திமா(24). இருவரும் தற்போது விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கிருஷ்ணாபுரத்தில் வசித்து  வருகின்றனர். அன்சுல் பாத்திமா முதன்முறையாக கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க கணவர் முடிவு செய்தார். இதனால் மருத்துவமனைக்கு வழக்கமான  பரிசோதனைக்கு கூட அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. ஒரே ஒருமுறை மட்டும் திருமங்கலத்தில் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில் அன்சுல் பாத்திமா பிரசவத்திற்காக கணவருடன் தம்பிபட்டி கிருஷ்ணாபுரத்தில் தங்கினார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. முகமது தாஜூதீன், யுடியூப்பில் வீடியோ  பார்த்து, அதன் அடிப்படையில் பிரசவம் பார்த்துள்ளார். நேற்று அதிகாலை அன்சுல் பாத்திமாவுக்கு 2.800 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காத நிலையில், தாய்க்கு ரத்தப்போக்கு  அதிகரித்தது.தகவலறிந்த கோட்டையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர் நேற்று காலை வீட்டிற்கு சென்று, தொப்புள் கொடியை பிரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு முகமது தாஜூதீன் சம்மதிக்கவில்லை.

3 நாட்களுக்கு தொப்புள் கொடியை அகற்றக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலைய, மருத்துவர் இந்திரா ஜெயராமன் சென்று தொப்புள் கொடியை அகற்றக் கோரியுள்ளார். இதற்கு சம்மதிக்காமல்  முகமது தாஜூதீன் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். எஸ்ஐ செல்வக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, கணவருடன் பேசி குழந்தையின் தொப்புள் கொடியை அகற்றினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையும், தாயையும் அழைத்து சென்றனர்.

அங்கு தடுப்பூசி போடக்கூடாது என கணவர் தகராறு செய்தார். சிவகாசி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சமாதானம் ஆகாமல் முகமது தாஜூதீன் தொடர்ந்து தகராறு செய்தார். போலீசார் வழக்கு போடுவோம் என மிரட்டியதை தொடர்ந்து, அவர் சமாதானம் அடைந்தார். இதனையடுத்து டாக்டர் காளிராஜ், குமரகுரு, மகேஸ்வரி, சாரா ஆகியோர் தாய்க்கு உரிய சிகிச்சை அளித்து ரத்தப்போக்கை நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்