SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் விடிய விடிய கரைப்பு

2018-09-16@ 18:45:14

திருச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சியில் 400 இடங்களிலும், மாவட்டத்தில் 1030 இடங்களிலும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. சிந்தாமணியில் இருந்து காவிரி பாலம் வழியாக ரங்கம் நோக்கி செல்லும் போது  சிலைகள் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு ஆற்றில் கரைக்கப்படுவதற்காக 3 இடங்களில் பாலத்தில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.  நேற்று மாலை முதல் மாநகரில் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் ஒவ்வொ ன்றாக மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க ஊர் வலமாக கொண்டு வரப்பட்டன. மேடையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கிரேன் மூலம் ஒவ்வொரு சிலையாக ஆற்றில் இறக்கி கரைக்கப்பட்டு வந்தன.

மாலை 5 மணிக்கு தொடங்கிய விநாயகர் சிலை கரைக்கும் பணி இன்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து நடந்தது. இதில் திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட 398 சிலைகள், புறநகரில் இருந்து 22, பெரம்பலுாரில் இருந்து 102, புதுக்கோட்டையில் இருந்து 3, சேலத்தில் இருந்து 4, கடலுாரில் இருந்து 1 என மொத்தம் 530 சிலைகள் கரைக்கப்பட்டன. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் நிஷா, மயில்வாகனன் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டனர். காவிரி ஆற்றில் இரு பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு மேற்கொள்வதற்காவும், பொதுமக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை அறிவிப்பை விடுப்பத்றகாகவும் மேடை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.

காவிரி ஆற்று பாலத்தின் இருபுறங்களிலும் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் நவீனவேன் மூலம் கண்காணிப்பு பணியை மேற் கொ ண்டனர். வெடிகுண்டு கண்டு பிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். முசிறி காவிரி ஆற்றில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு: முசிறி, தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கிழங்குமாவு, களிமண் போன்ற விநாயகர் சிலைகள் லோடு ஆட்டோக்களில் ஏற்றி முக்கிய வீதி கள் வழியாக கொண்டு வரப்பட்டு முசிறி கொக்குவெட்டியான் கோயில் அருகே உள்ள காவிரிஆற்றில் சிலைகளை கரைத்து புனித நீராடினர். முசிறியிலிருந்து 65, தா.பேட்டையில் 30, ஜெம்புநாதபுரம் பகுதியில் 36, துறை யூர் பகுதியில் 55, உப்பிலியபுரத்திலிருந்து 42 சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது. திருவெறும்பூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 75 சிலைகள் மட்டும் 17ம் தேதி வேங்கூர் காவிரி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்: திருச்சியில் நேற்று மாலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் இரவு 7 மணி வரை ரங்கம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்த நகர பஸ்கள் அனுமதிக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் பெரிய சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட போது காவிரி பாலத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் காவிரி பாலத்தில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்