SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரும் 2022ம் ஆண்டிற்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

2018-09-16@ 18:30:48

திருமலை: வரும் 2022ம் ஆண்டிற்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்ைத செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் இன்று திருப்பதியில் தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றிரவு 10.8 மணியளவில் பிஎஸ்எல்வி சி 42 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. யு.கே. நாட்டை சேர்ந்த இந்த ராக்கெட் வர்த்தக ரீதியாக ஏவப்படுகிறது. இதற்கு முன்பு மற்ற செயற்கைக்கோளுடன் இணைந்து வர்த்தக ரீதியான ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தி வந்தோம். இன்று செலுத்தும் இந்த ராக்கெட் முற்றிலும் வர்த்தக ரீதியிலானது. நவம்பர் மாதம் ஜிஎஸ்எல்வி மாக். டி2, ஜி.சாட் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும். சந்திராயன்-2 அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் செலுத்தப்படும். மனிதர்களை விண்ணில் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தும்படி பிரதமர் தெரிவித்தார்.

இதற்காக எங்களுக்கு 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம்தேதி வரை காலக்கெடு வழங்கியுள்ளார். ஆனால் அதற்கு முன்கூட்டியே இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பிரதமர் தெரிவித்ததை போன்று முன்கூட்டியே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். ராக்கெட்டுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கு கடந்த ஆண்டு சோதனை நடந்தது. மேலும் பல சோதனைகள் நடத்தி மறுசுழற்சி ராக்கெட்டுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சந்திராயன்-2 முற்றிலும் விண்ணில் செலுத்தப்பட்ட பின் அதில் உள்ள ஒரு பாகம் விண்ணிலேயே சுற்றி வரும். அதிலிருந்து மற்றொரு பாகம் சந்திரனில் இறங்கி அதனை சுற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்