SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீத்தேன் எடுக்க ஆய்வா? மண் ஆய்வு பணியை தடுத்த பொதுமக்கள்

2018-09-16@ 18:28:39

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காச்சி கிராமத்தில் காளியம்மன் தெருவில் புதிதாக அரசு மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே 600 அடி ஆழத்தில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்றில்  35 ராட்சத இரும்பு குழாய்கள் திடீரென வந்து இறங்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மீத்ேதன் எடுப்பதாக சந்தேகித்து  இரும்பு குழாயக்களை அப்புறப்படுத்த கோரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நாச்சியார்கோவில் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு குழாய்கள் லாரி மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஊருக்கு பொதுவான தரிசு நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடந்தது. பள்ளிக்கு குடிநீர் குழாய் அமைக்கிறார்கள் என நினைத்தோம். ஆனால் பெரியஅளவில் குழாய்கள் வந்து இறங்கியதால், சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்ட போது, அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை.ஆனால் 5 அடிக்கு ஒரு முறை பூமியில் இருந்து எடுக்கப்படும் மண்ணை தனித்தனியாக பிரித்து வைத்திருந்தனர். இதனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன், ஷேல் காஸ் எதுவும் எடுப்பதற்கான ஆராய்ச்சியாக இருக்கலாம் எனக்கருதி ஆய்வு பணியை தடுத்து நிறுத்தினோம். இந்த பகுதியில் இதுமாதிரி வேறு எங்கு ஆய்வு நடத்தினாலும் தடுத்து நிறுத்துவோம் என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்