SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாரணாசியில் நாளை பள்ளி மாணவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி

2018-09-16@ 17:29:11

லக்னோ: தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை 17-ம் தேதி 68-வது வயது பிறக்கிறது. இதையொட்டி,  இரண்டு நாள் பயணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் வாரணாசி வரும் பிரதமர், தனது பயணத்தின்போது புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்கிறார்.

பாரா லால்பூரில் சுமார் 5,000 குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் “சலோ ஜீதே ஹெயின்” 32 நிமிட படத்தை அவர் பார்க்கின்றார். பின்னர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். மேலும் 18-ம் தேதி வாரணாசியில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, நிறைவடைந்த சில நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்