SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரசாந்த் கிஷோர், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்

2018-09-16@ 13:10:12

பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் கில்லாடி என பெயர் பெற்றவர். கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014 லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார். பின்னர் பீஹார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி, வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆனால், உத்திரபிரதேசத்தில் அவரது வியூகம் வெற்றி பெறவில்லை. இதனால் சில நாட்கள் அவர் அமைதியாக இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனிநபர்களுக்காக பிரசாரம் செய்த நான், தேர்தல் அரசியலுக்கு தயாராக உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், பாட்னாவில் , பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் முன்னிலையில், அக்கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். அப்போது, பிரசாந்த் தான் கட்சியின் எதிர்காலம் எனக்கூறிய நிதிஷ், ஜீன்ஸ் உடையில் வலம் வரும் பிரசாந்த், அரசியல்வாதி போல் உடை அணிய வேண்டும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2019

    26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்