SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் மாற்றப்பட்ட முடிவு உயரிய மட்டத்தில் எடுக்கப்பட்டதாக சிபிஐ விளக்கம்

2018-09-16@ 12:15:58

டெல்லி: தொழிலதிபர் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் மாற்றப்பட்ட முடிவு உயரிய மட்டத்தில் எடுக்கப்பட்டதாக சிபிஐ விளக்கமளித்துள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தங்கியுள்ளார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 10ம் தேதி வழங்கப்பட உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த போது, மல்லையா, தான் லண்டன் செல்வதற்கு முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசியதாக கூறினார். ஆனால், இதனை அருண் ஜெட்லி மறுத்துள்ளார். பார்லிமென்ட் வளாகத்தில் ஒரிரு நிமிடங்கள் தான் இந்த சந்திப்பு நடந்தது. கடன் சர்ச்சை தொடர்பாக வங்கி நிர்வாகத்திடம் பேசி கொள்ளுமாறு மல்லையாவிடம் கூறிவிட்டதாக விளக்கமளித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் சிபிஐ கூடுதல் இயக்குநர் ஏகே சர்மா தான், மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை பலவீனப்படுத்தி, அவரை தப்பி செல்ல அனுமதித்தார்.

சர்மா, குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதிகாரி. சிபிஐயில், பிரதமருக்கு மிகவும் பிடித்தவர். இவர் தான், நிரவ்மோடி மற்றும் மெகுல் சோக்சி தப்பி செல்வதற்கும் காரணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயால் கூறியதாவது: லுக் அவுட் நோட்டீசை மாற்றும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை. உரிய மட்டத்தில் ஆலோசனைக்கு பிறகு தான் எடுக்கப்பட்டது. ஏகே சர்மா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மல்லையாவை கைது செய்யவோ, தடுத்து நிறுத்தவோ, அடிப்படை முகாந்திரம் இல்லாத காரணத்தினால் தான் நோட்டீஸ் மாற்றப்பட்டது என்பதை பல முறை கூறியுள்ளோம். இதனால், மல்லையோ, நிரவ் உள்ளிட்டோர் தப்பி செல்வதில் எந்த அதிகாரிக்கும் பங்கு உள்ளது என்ற கேள்வியே எழவில்லை. வங்கிகள் புகார் அளித்த உடனேயே நாங்கள் நடவடிக்கையை எடுக்க துவங்கிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்