SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐகோர்டுகளில் உள்ள 427 காலியிடங்களை நிரப்ப குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகும் என தகவல்

2018-09-16@ 11:17:12

டெல்லி: தற்போதைய நிலவரப்படி நாடு முழவதிலும் உள்ள ஐகோர்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 75 முதல் 85 நீதிபதிகள் பணி ஓய்வு பெறுகின்றனர். அந்த வகையில் 24 ஐகோர்டுகளில் உள்ள 427 காலியிடங்களை நிரப்ப குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகும். ஐகோர்ட்டுகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 1079 ஆகும். ஆகஸ்ட் 31 ல் 427 பணியிடங்கள் காலியானதால் நீதிபதிகளில் எண்ணிக்கை 652 ஆக குறைந்துளள்ளது. ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி சமீபத்தில் மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டாலும் ஆண்டுக்கு 29 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018 மே மாதம் வரை கூடுதலாக 313 நீதிபதிகள் மட்டுமே சட்ட அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஆண்டுக்கு 104 நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுபெறும் நீதிபதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது குறைவானதாகவே கருதப்படுகிறது. நீதிபதிகள் காலி பணியிடங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 2017 அக்டோபரில் 387 ஆக இருந்த ஐகோர்ட் நீதிபதிகளின் காலி பணியிடங்கள், 2018 மார்ச் மாதத்தில் 406 ஆக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 31 ல் இது 427 ஆக மேலும் அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும் சராசரியாக ஐகோர்டுகளில் உள்ள 65 க்கும் மேற்பட்ட நிரந்தர நீதிபதிகள் ஓய்வு பெற உள்ளனர். அதிகரித்து வரும் ஐகோர்ட் நீதிபதிகளின் காலி பணியிடங்களால் 39.52 லட்சம் வழக்குகள் ஐகோர்ட்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் 22 சதவீதம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்