SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை: மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே

2018-09-16@ 10:23:20

ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால் நான் ஒரு மத்திய மந்திரி, எனக்கு அரசின் சலுகைகள் உள்ளன. அவற்றை நான் பயன்படுத்தி வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி எனக்கு கவலையில்லை. எனது மந்திரி பதவி பறிபோனால்தான் நான் பாதிப்பு அடைவேன் என கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மத்திய மந்திரியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்