SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு கூட்டாட்சியை ஏற்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும்: ஈரோடு மதிமுக மாநாட்டில் வைகோ பேச்சு

2018-09-16@ 07:16:58

ஈரோடு:  மத்தியில் தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு, கூட்டாட்சியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளின் அரசு அமைய வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக மாநில மாநாட்டில் வைகோ பேசினார்.
 ஈரோட்டில் நடந்த மதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:  நாட்டில் ஜனநாயகத்திற்கு தற்போது ஆபத்து உள்ளது.  இன்றைக்கு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.5 கோடி செலவு வேண்டியுள்ளது. வாக்குகள் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.  திராவிட முன்னேற்றக்கழகத்தால் வார்ப்பிக்கப்பட்டவன் நான். எனது அரசியல் பொதுவாழ்வு 54 ஆண்டு ஓடி மறைந்தாலும் பல மறக்க முடியாத சம்பவங்கள் உண்டு. 1978ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எனது கன்னிப்பேச்சில் மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்துவிட்டு, இந்தி திணிப்புக்கு எதிராக பேசினேன். தொடக்க காலத்தில் நாடாளுமன்றத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் எனக்கு எப்படி பேச வேண்டும் என்று பயிற்சி கொடுத்தார்.

 தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. அதற்கு தமிழக அரசு துணை போகிறது. மணல், குட்கா, டெண்டர் என ஊழல் நிறைந்த அரசாக உள்ளது. இந்த அரசை தூக்கி எறிய வேண்டி உள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்து சமூக நீதிக்கு எதிராகவும், இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராகவும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.  நாடு ஒன்றாக இருக்க வேண்டுமெனில் மத்தியில் உள்ள ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியிடம் கூட்டு வைத்தது தவறுதான். தமிழகத்தின் மாண்புகளை பாதுகாக்க மத்தியில் உள்ள ஆட்சி தூக்கி எறிந்து கூட்டாட்சி தத்துவத்துவத்தை அமைக்கின்ற கூட்டணி அரசு மத்தியில் அமைய வேண்டும். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற உறுதி எடுத்து தான் கூட்டணியில் இணைந்துள்ளோம் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்