SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலின் போது அரசியல் கட்சிகள் கருப்புபணத்தை பயன்படுத்துவதை தடுக்க இந்திய சட்டங்கள் போதுமானதாக இல்லை: தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

2018-09-16@ 07:10:44

டெல்லி: தேர்தலின் போது அரசியல் கட்சிகள் கருப்புபணத்தை பிரயோகிக்கி்ன்றனர். இதனை தடுக்க இந்திய சட்டங்கள் போதுமானதாக இல்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியி்ல் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியது, இந்தியா எத்தனையோ பிரச்னைகளை எதிர்கொண்டுவந்தாலும் முக்கிய பிரச்னை எதுவென்றால் ''தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் பணத்தைத் தவறாகக் கையாளும் போக்குதான் இதனாலேயே தேர்தல் பிரச்சாரங்களின்போது வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதில் பெரும் சவால் நீடிக்கிறது.

தேர்தலின்போது புழங்கும் பணத்தொகையைக் கட்டுப்படுத்தப் போதுமான சட்டவிதிகள் இந்தியாவில் இல்லை. இதனால் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கிறது''மேலும் ''தேர்தல் நேரங்களில் பொய்யான செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. அதை ஊடகங்களே முயன்று தடுக்க வேண்டும்'' என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்