SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாருதி சியாஸ்

2018-09-16@ 01:03:23

மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் மிகச்சிறந்த அம்சங்களுடன் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் இதோ....இப்புதிய காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக எல்இடி பகல்நேர விளக்கு மற்றும் எல்இடி டெயில் லைட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளது. இது, இக்காரின் முக்கிய சிறப்பம்சம். இதன் எல்இடி டெயில் லைட் கிளஸ்ட்டர் பிஎம்டபிள்யூ கார்களின் டெயில் லைட் போன்ற சாயலை பெற்றிருக்கிறது. இதன் முகப்பு முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹெட்லைட் கிளஸ்ட்டர் அமைப்பு, கிரில் அமைப்பு, மிக வலிமையான பம்பர் அமைப்புடன் வசீகரமாக மாறி இருக்கிறது. 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களும் மாருதி சியாஸ் காரின் தோற்றத்திற்கு வலு சேர்க்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அதிக சக்தியை வெளிப்படுத்தும் திறன்வாய்ந்த புத்தம் புதிய பெட்ரோல் இன்ஜின். இப்புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரில், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய பெட்ரோல் மாடலிலும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் கார் நின்றுகொண்டிருந்தால், இன்ஜின் தானாக ஆப் ஆகிவிடும். அதேபோல், பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் இயக்க ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமித்து, மின் மோட்டார் மூலமாக காருக்கு கூடுதல் சக்தியை தரும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த காரில் உள்ளது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைந்த மாசு உமிழ்வு திறனையும் இந்த பெட்ரோல் மாடல் பெறுகிறது. மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்திற்காக இந்த காரில் லித்தியம் அயான் பேட்டரியில் பி ரேக் சிஸ்டத்தின் இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றி சேமிக்கப்படுகிறது. மேலும், இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டார், கார் வேகமெடுக்கும்போது, காரின் இன்ஜினுக்கு கூடுதல் டார்க் திறனை வழங்கும் விதத்தில் இயங்கும். பிரேக் பிடிக்கும்போது மின் உற்பத்தி ஜெனரேட்டர் போல் இயங்கும். இந்த காரில் இருக்கும் மின் மோட்டார், கார் திடீரென வேகம் எடுக்கும்போது கூடுதல் டார்க் திறனை, காருக்கு வழங்கும். இதனால், உடனடி பிக்கப் கிடைக்கும். இன்ஜின் மூலமாக அதிக எரிபொருள் சிக்கனத்தையும் பெறும் வாய்ப்பை வழங்குகிறது. உட்புறத்தில் அலங்கார மரச்சட்டங்களுடன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. கருப்பு- பீஜ் வண்ண கலவையிலான இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், கதவுகள் மற்றும் டேஷ்போர்டுகளில் அதிக தரமான பாகங்கள் கொடுக்கப்பட்டிருப்பது பிரிமியமாக தெரிகிறது.

எம்ஐடி திரை இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் இரண்டு டயல்களுக்கு மத்தியில் 4.2 அங்குல அளவிலான மல்டி இன்பர்மேஷன் திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிஎப்டி திரை மூலமாக எவ்வளவு தூரம் பயணிக்கலாம், கியர் ஷிப்ட் இன்டிகேட்டர் (மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டும்), இன்ஜின் எரிபொருளை எடுத்துக்கொள்ளும் அளவு உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை பெற முடியும். நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஆக்சிலரேட்டர் கொடுக்காமல் காரை செலுத்துவதற்கான க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், சரியான வெப்பநிலை அளவை தொடர்ந்து தக்கவைக்கும் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, வாய்மொழி உத்தரவு மூலமாக சாதனங்களை கட்டுப்படுத்தும் வாய்ஸ் கமாண்ட் வசதி, மலைச்சாலைகளில் கார் பின்னோக்கி செல்வதை தடுக்கும் ஹில் ஹோல்டு வசதி, கார் நிலைத்தன்மை குலையாமல் செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது. இப்புதிய மாருதி சியாஸ் காரின் பெட்ரோல் மாடல் ₹8.19 லட்சத்தில் இருந்தும், டீசல் மாடல் ₹9.19 லட்சம் ஆரம்ப விலையில் இருந்தும் விற்பனைக்கு கிடைக்கிறது. பழைய மாடலைவிட ₹35,000 வரை கூடுதல் விலையில் இப்புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்