SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஸ்கோடா சூப்பர்ப்!

2018-09-16@ 01:02:28

ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் எடிசன் என்ற பெயரில் புதிய மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்கோடா கார் வாங்கிய பழைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இப்புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் எடிசன் மாடல் ₹23.49 லட்சம் (எக்ஸ்ஷோரூம் புதுடெல்லி) என்ற விலையில் பழைய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. சற்று சொகுசான கார் மாடலுக்கு மாற நினைக்கும் ஸ்கோடா வாடிக்கையாளர்களை தவறவிடக்கூடாது என்ற எண்ணத்திலும், வாடிக்கையாளர்களை தொடர்ந்து தனது பிராண்டில் தக்கவைக்கும் விதத்திலும் இப்புதிய சூப்பர்ப் மாடலை ஸ்கோடா விற்பனை செய்ய இருக்கிறது. சாதாரண ஸ்கோடா சூப்பர்ப் காரைவிட இப்புதிய கார்ப்பரேட் எடிசன் மாடல் ₹8.50 லட்சம் விலை குறைவாக வந்திருக்கிறது. இதனால், ஸ்கோடா வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறப்பான தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சாதாரண ஸ்கோடா சூப்பர்ப் காரின் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் பேஸ் மாடலைவிட இந்த கார்ப்பரேட் எடிசன் மாடலில் சில வசதிகள் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண ஸ்கோடா சூப்பர்ப் காரில் 177 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் அளிக்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 175 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் அளிக்கிறது. பெட்ரோல் மாடலானது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டீசல் மாடலானது, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த கார் வசதிகளுக்கு ஏற்ப, 3 பெட்ரோல் வேரியண்ட்டுகளிலும், 2 டீசல் வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது. ₹31.92 லட்சம் முதல் ₹41.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் (புதுடெல்லி) விலையில் கிடைக்கிறது.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டில் பை-ஸினான் ஹெட்லைட், அடாப்டிவ் லைட் சிஸ்டம், 17 அங்குல அலாய் வீல், ரியர் வியூ பார்க்கிங் கேமரா, இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டியூவல் ஏர்பேக், எலக்ட்ரானிக் டிபரன்ஷியல் லாக், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்பங்களையும் பெற்றுள்ளது.தனது வாடிக்கையாளர்களுக்காக இந்த சிறப்பு பதிப்பு மாடலை ஸ்கோடா வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த கார்ப்பரேட் எடிசன் மாடலுக்கு தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கான மற்றொரு சிறப்பு பதிப்பு மாடலையும் வெளியிட ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்