SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரெனோ 7 சீட்டர் கார் அறிமுகம்

2018-09-16@ 01:01:29

இந்திய கார் மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கும் ரெனோ க்விட் கார், வாடிக்கையாளர்களின் தேர்வில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்நிலையில், தனது சந்தையை வலுப்படுத்திக்கொள்ளும் விதத்தில், ரெனோ கார் நிறுவனம் க்விட் கார் அடிப்படையிலான புதிய 7 சீட்டர் எம்பிவி (மல்டி பர்பஸ் வெகிக்கிள்) ரக காரை உருவாக்கி இருக்கிறது. இந்த 7 சீட்டர் எம்பிவி ரக கார், 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். இந்த கார் தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கார், 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் மூன்று வரிசை இருக்கை வேண்டி, முன்புறத்தில் பானட் அமைப்பின் நீளம் மிகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது. க்விட் காரின் சில டிசைன் தாத்பரியங்கள் இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்புற பானட் மற்றும் பின்புற தோற்றம் இதை உறுதிப்படுத்துகிறது. இப்புதிய காரில் ஸ்டீல் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டட்சன் கோ ப்ளஸ் கார் போலவே, இந்த காரும் மினி எம்பிவி மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. ரெனோ - நிசான் கூட்டணியின் CMF- A+ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இப்புதிய கார், ஆர்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்படும் 68 பிஎஸ் பவரை அளிக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்த ரெனோ திட்டமிட்டுள்ளது. எனினும், 7 சீட்டர் மாடலுக்கு இந்த இன்ஜின் திறன் போதாது என்பதால், டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் விதத்தில் இந்த இன்ஜினில் மாறுதல் செய்ய வாய்ப்புள்ளது. இதில், டீசல் மாடலுக்கு வாய்ப்பில்லை. க்விட் காரில் இருப்பது போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. ஓட்டுனருக்கான ஏர்பேக், பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட்பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்புதிய கார் ₹5 லட்சம் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. க்விட் கார் போலவே இதுவும் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய வரவேற்பை உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china_cloning11

  செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

 • snow_river_falls11

  மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

 • christmas_planeealm1

  உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

 • sutrula_12Icehotel1

  சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

 • mumbai_theevibathu11

  மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்