SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலேசியா, இலங்கையில் இருந்து கடத்தி வந்த 18 லட்சம் தங்கம் சிக்கியது: 3 பேர் பிடிபட்டனர்

2018-09-16@ 01:00:34

மீனம்பாக்கம்: மலேசியா, இலங்கையில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 18 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மலேசிய  தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று  முன்தினம் இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தது. அதில், சுற்றுலா பயணியாக  மலேசியா சென்று திரும்பிய சென்னையை சேர்ந்த உமர் அப்துல்லா (36) என்பவரது  உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஷேவிங் ரேசர் கைப்பிடி  தங்கத்திலும், ஷேவிங் கிரீமில் தங்க துண்டுகளையும் மறைத்து வைத்திருந்தது  தெரிந்தது. மொத்தம் 6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல்  செய்து, அவரை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து, மலேசிய தலைநகர்  கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று அதிகலை 2.30 மணிக்கு  சென்னை வந்தது. அதில், சுற்றுலா பயணியாக மலேசியா சென்று திரும்பிய ஆந்திர  மாநிலத்தை சேர்ந்த ராஜேஸ்வரன் (41) என்பவரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள்  தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, ஆசனவாயில் சிறிது சிறிதாக  150 கிராம் தங்க துண்டுகளை கடத்தி வந்தது தெரிந்தது. மொத்தம் 4.5 லட்சம்  மதிப்பு தங்கத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.இதேபோல்,  இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்த பயணிகள்  விமானத்தில், சுற்றுலா பயணியாக இலங்கை சென்று திரும்பிய  சென்னையை சேர்ந்த  குத்தூஸ் (30) என்பவரது உடமைகளை அதிகாரிகள்  சோதனையிட்டபோது, இழுவை  சூட்கேசின் கைப்பிடியில் தங்க துண்டுகளை மறைத்து  வைத்திருந்தது தெரிந்தது.

மொத்தம் 7.5 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து,  குத்தூசை கைது செய்தனர். அடுத்தடுத்த 3 விமானங்களில் 18 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்