SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மதுரை அருகே 5 பேர் கைது: 7 லட்சம் கள்ளநோட்டு பிரிண்டர், கார் பறிமுதல்

2018-09-16@ 00:56:55

மதுரை: மதுரை அருகே வரிச்சியூரில் 7 லட்சம் மதிப்பிலான  கள்ளநோட்டுகள் சிக்கின. இதுதொடர்பாக 5 பேர் கைதாயினர். பிரிண்டர் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை சிவகங்கை ரோட்டில் வரிச்சியூர் பகுதியில் இரு கும்பல் தங்களுக்குள் கள்ள நோட்டுகளை மாற்ற வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று மாலை தனிப்படையினர் வரிச்சியூர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அமர்ந்து பேசிகொண்டு இருந்த கும்பலை கண்காணித்தனர். அவர்கள் தங்களுக்குள் கள்ள நோட்டுகளை மாற்றியது தெரிந்தது. பதுங்கி இருந்த போலீசார் கும்பலை சேர்ந்தவர்களை விரட்டி பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில், அவர்கள் நாகர்கோவிலை சேர்ந்த தங்கராஜ், மதுரையை சேர்ந்த அர்ஜூன், அண்ணாதுரை, போஸ் மற்றும் ராஜாமோகன் என தெரிந்தது. அவர்கள் 5 பேரையும் தனிப்படையினர் கைது செய்து, ₹6 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்புள்ள 500, 2000 ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர். மேலும், கும்பல் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் தெரிவித்த தகவலின்பேரில், பணம் அச்சடிக்க பயன்படுத்திய பிரிண்டர் மற்றும் தளவாடப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்