SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக மாஜி அமைச்சர் டிடிவி கட்சியில் இணைந்தார்

2018-09-16@ 00:56:29

திருச்சி: அதிமுக மாஜி அமைச்சர் செ.தாமோதரன் நேற்று டிடிவி தினகரன் கட்சியில் இணைந்தார். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மாலை அணிவித்தார். இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன். அதிமுகவை சேர்ந்த இவருக்கு விவசாய பிரிவு இணை செயலாளர் பதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை திருச்சி வந்த தாமோதரன் சங்கம் ஓட்டலுக்கு சென்று, டிடிவி.தினகரனை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார். பின்னர் அண்ணா சிலைக்கு சென்ற ஊர்வலத்திலும் தாமோதரன் கலந்து கொண்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்