SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றவாளி என்ற முள்ளை எடுக்காமல் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா கேட்பது அரசியல் நாடகம்: திவாகரன் பேட்டி

2018-09-16@ 00:55:57

மன்னார்குடி: அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் நேற்று, மன்னார்குடியில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகளை தமிழக அரசு தொகுத்து அண்ணாவின் சாதனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க அவற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். அண்ணாவின் பெயரை சொல்லி கட்சி நடத்துபவர்கள் லஞ்ச லாவண்யங்களை தவிர்த்து நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும். குற்றவாளி என்கிற முள்ளோடு ஜெயலலிதா சமாதியில் உள்ளார்.

அவரின் பெயரில் ஆட்சி நடத்துகிறோம் என சொல்பவர்கள் அந்த முள்ளை அகற்ற முயற்சிக்காமல் ஜெயலலிதாவுக்கு `பாரத ரத்னா’ விருது கேட்பது அரசியல் நாடகம்.திருவாரூர் தொகுதிக்கு ஏராளமான நலத் திட்ட உதவிகளை கருணாநிதி செய்துள்ளார். அதனால் அத்தொகுதி மக்கள் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கே நன்றி கடனோடு வாக்களிப்பார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமான்ய மக்களின் குரல்வளையை நசுக்குகிறது. மத்திய, மாநில அரசுகள் தங்கள் மக்கள் விரோத போக்கை கை விட வேண்டும். இவ்வாறு திவாகரன் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்