SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டும் இடமானது சிறைகளை சொகுசு விடுதியாக்கிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

2018-09-16@ 00:51:13

நாகர்கோவில்: தமிழக சிறைகளை சொகுசு விடுதிகளாக மாற்றிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் சொர்க்கபுரியாக மாறி உள்ளது நிரூபணமாகி இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலூரில் டாக்டர் ரெட்டி கொலை சம்பவம் நடந்த போது அதற்கான சதி திட்டம் சிறையில் தான் தீட்டப்பட்டது என்று கூறப்பட்டது. தற்போது பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டும் இடமாக தமிழக சிறைச்சாலைகள் இருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது.  வெளியில் இருப்பதைவிட சிறைக்குள் சென்றால் சுகபோக வாழ்க்கை வாழலாம் என்று எண்ணக்கூடிய அளவுக்கு சிறைகள் சொகுசு விடுதிகளாக மாறி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளை இடமாற்றம் செய்வதுடன் கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை தொடர்பாக கவர்னர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தனிப்பட்ட ராஜிவ்காந்தி மட்டும் அங்கு கொல்லப்படவில்லை. அவருடன் சேர்த்து பல காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். பலர் கை, கால்களை இழந்து ஊனமாகி உள்ளனர். இந்த நேரத்தில் இந்த வழக்கு விசாரணையில் விடுபட்டு போனவர்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை கருத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் மூத்த செய்தி தொடர்பாளர்கள் கூட, ராஜிவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.நாகர்கோவில்: தமிழக சிறைகளை சொகுசு விடுதிகளாக மாற்றிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் சொர்க்கபுரியாக மாறி உள்ளது நிரூபணமாகி இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலூரில் டாக்டர் ரெட்டி கொலை சம்பவம் நடந்த போது அதற்கான சதி திட்டம் சிறையில் தான் தீட்டப்பட்டது என்று கூறப்பட்டது. தற்போது பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டும் இடமாக தமிழக சிறைச்சாலைகள் இருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது.  வெளியில் இருப்பதைவிட சிறைக்குள் சென்றால் சுகபோக வாழ்க்கை வாழலாம் என்று எண்ணக்கூடிய அளவுக்கு சிறைகள் சொகுசு விடுதிகளாக மாறி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளை இடமாற்றம் செய்வதுடன் கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை தொடர்பாக கவர்னர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தனிப்பட்ட ராஜிவ்காந்தி மட்டும் அங்கு கொல்லப்படவில்லை. அவருடன் சேர்த்து பல காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். பலர் கை, கால்களை இழந்து ஊனமாகி உள்ளனர். இந்த நேரத்தில் இந்த வழக்கு விசாரணையில் விடுபட்டு போனவர்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை கருத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் மூத்த செய்தி தொடர்பாளர்கள் கூட, ராஜிவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்