SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

லுக் அவுட் நோட்டீசை பலவீனப்படுத்தி மல்லையாவை தப்ப விட்டது மோடியின் ஆதரவு அதிகாரி: ராகுல் காந்தி அடுத்த குற்றச்சாட்டு

2018-09-16@ 00:44:52

புதுடெல்லி: விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை பலவீனப்படுத்தியது மோடியின் செல்வாக்கால் சிபிஐ.யில் நுழைந்த ஏ.கே.சர்மாதான் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். ராகுல் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; சி.பி.ஐ.யின் இணை இயக்குனரான ஏ.கே. சர்மா, மல்லையாவுக்கு அளிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை பலவீனமடைய செய்து உள்ளார்.  இது மல்லையா தப்பி செல்ல அனுமதித்து விட்டது. குஜராத்திலிருந்து சிபிஐ.க்கு வந்த இந்த அதிகாரி, மோடியின் செல்வாக்கை பெற்றவர். பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வகுத்த திட்டத்திற்கும் இந்த அதிகாரியே பொறுப்பு ஆவார்.  சி.பி.ஐ.யின் விசாரணை அதிர்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்