SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் நெருக்கடி ஜலந்தர் பிஷப் பொறுப்புகள் வேறு பாதிரியாரிடம் ஒப்படைப்பு: 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகிறார்

2018-09-16@ 00:43:17

திருவனந்தபுரம்: பலாத்கார வழக்கில் நெருக்கடி முற்றியதை அடுத்து பிஷப் பிராங்கோ தனது பொறுப்புகளை வேறொரு பாதிரியாரிடம் ஒப்படைத்தார். கன்னியாஸ்திரி  பலாத்கார புகார் தொடர்பாக வரும் 19ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக பிஷப்  பிராங்கோவுக்கு போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதுகுறித்து  வாடிகனில் உள்ள போப் அலுவலகத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டது.  இதைதொடர்ந்து பிஷப் பிராங்கோ விவகாரத்தில் வாடிகன் தரப்பிலும் நடவடிக்ைக  எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் பிஷப்  பிராங்கோ பதவியில் இருந்து விலகுவதற்கு வாடிகனில் இருந்து கடிதம்  அனுப்பப்படும் என தகவல் வெளியானது.
பிஷப் பொறுப்பில் இருக்கும்ேபாதே  போலீசார் ைகது செய்தால் பிஷப் பதவிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் அவரை பதவியை விட்டு விலக வாடிகனில் இருந்து நிர்பந்தம் தரப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடி முற்றுவதால் பிஷப் பிராங்கோ நேற்று தனது  பொறுப்புகளை பாதிரியார் மேத்யூ என்பவரிடம் ஒப்படைத்தார். விசாரணை முடியும் வரை  ஜலந்தர் பிஷப் பிராங்கோவின் பொறுப்புகளை மேத்யூ கவனிப்பார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிஷப் பிராங்கோ கூறுகையில்,  எனது பொறுப்புகள் அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன். எனக்காக  அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றார்.
பிராங்கோ வரும் 19ம் ேததி காலை 10 மணியளவில் கோட்டயம் எஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக திட்டமிட்டுள்ளார். அன்று அவர் கைது ெசய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. கிறிஸ்தவ சபை மீது வழக்குபதிவு: பிஷப்  பிராங்கோ தலைமையில் நடக்கும் மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் என்ற கிறிஸ்தவ அமைப்பு,  கன்னியாஸ்திரியின் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை  நடத்தி, நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.

அதில்,  பிஷப் பிராங்கோ கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்யவில்லை. கிறிஸ்தவ  சபையை அவமானப்படுத்தும் வகையில் சிலர் செய்த சதி என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையுடன் ஒரு புகைப்படத்தையும் சபை  வெளியிட்டது. அதில் பிஷப் பிராங்கோவுடன், அவர் மீது புகார் கூறிய  கன்னியாஸ்திரி ஒன்றாக அமர்ந்து இருப்பது போல் உள்ளது. இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த கிறிஸ்தவ சபை மீது வழக்குப்பதிவு  ெசய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து  கோட்டயம் எஸ்பி ஹரிசங்கர் உத்தரவின்பேரில் அந்த மிஷனரீஸ் ஆப் ஜீசஸ்  கிறிஸ்தவ அமைப்பின் மீது குரவிலங்காடு போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்