SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்ணிடம் செயின் பறிப்பு

2018-09-16@ 00:41:27

ஆவடி: சென்னை அடையாறு, கெனால் பேங்க் ரோட்டை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி பத்மாவதி (46). இந்நிலையில், திருநின்றவூரில் வசிக்கும் தனது தம்பி வீட்டுக்கு நேற்று மதியம் மாநகர பேருந்தில் பத்மாவதி கிளம்பினார்.
பின்னர் அவர் தம்பி வீட்டுக்கு சென்றுவிட்டு, நேற்று மாலை மீண்டும் பஸ்சில் வீடு திரும்புவதற்காக, பத்மாவதி திருநின்றவூர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து கொண்டிருந்தார். பெரியார் நகர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அருகே பத்மாவதி வந்தபோது, அவரை பைக்கில் வந்த 2 பேர் வழிமறித்தனர்.அவர்களில் ஒருவன் இறங்கி வந்து, பத்மாவதியின் கழுத்தில் இருந்து 5 சவரன் தாலி சங்கிலியைப் பறித்தான். பின்னர் இருவரும் பைக்கில் தப்பி சென்றனர். புகாரின்பேரில் திருநின்றவூர் போலீசார், வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்