SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாட்டு துவக்க பொதுக்கூட்டம்: ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

2018-09-16@ 00:38:02

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திருச்சியில் “அரசியல் அதிகாரங்களில் ஒடுக்கப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் பலம் பெறவேண்டும் என்ற நோக்கில் ‘’அரசியலாய் அணிதிரள்வோம்! அதிகாரத்தை மீட்டெடுப்போம்!’’ என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் துவக்கப் பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் நேற்று நடந்தது. எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.  மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் வரவேற்றார். பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது துவக்க உரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், பாப்புலர் ஃப்ரண்ட்  பொதுச் செயலாளர் காலித் முகம்மது, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் தலைவர் மன்சூர் காஷிபி, எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைவர் முஹம்மது பாரூக், வர்த்தகர் அணி மாநில பொதுச்செயலாளர் அஜ்மல் கான், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ராஜா முகமது ஆகியோர் மாநாட்டின் நோக்கம் மற்றும் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில செயலாளர் ரத்தினம் நன்றியுரையாற்றினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்