SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிண்டிக்காரர் விட்ட டோஸ்ல ஆடிப்போன ஆளுங்கட்சி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2018-09-16@ 00:37:45

‘‘ஏன் டென்ஷனில் இருக்கீங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘எனக்கு டென்ஷன் இல்ல... ஆளுங்கட்சிக்காரங்களுக்குதான் டென்ஷன்... ராஜிவ் கொலையில் தொடர்புள்ள
ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று 9ம் தேதி அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றியது... இந்த கூட்டத்துக்கு பிறகு வெளியே வந்த மைக் தலைவரு இன்றைக்கே தீர்மானம் கிண்டிக்கு போய்டும்னு அடிச்சு சொன்னாரு... அதுமட்டுமில்லாம அடுத்தடுத்த நாட்களில் அவர் நாங்கள் அனுப்பிய தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுத்து விடுதலை செய்தே ஆக வேண்டும்... அரசியல் சட்டப்பிரிவு 161ல தாராளமாக ரிலீஸ் செய்யலாம்னு சொன்னாரு... எல்லாமே மிரட்டும் தொனியில் இருந்ததாம்...’’ என்று இழுத்தார் விக்கியானந்தா.
‘‘இழுக்காதீங்க சீக்கிரம் சொல்லுங்க...’’
‘‘மைக் தலைவர் பேச்சால... கிண்டிக்கார் பல்வேறு சிக்கல்களையும் எதிர்ப்புகளையும் தேவையில்லாம சந்திக்க வேண்டியதாக போச்சாம்... ஏற்கனவே கருப்பு கொடி பிரச்னையை சமாளிக்க முடியாம திணறிட்டாரு... அதுக்குள்ள அமைச்சரவை பரிந்துரையை கிண்டிக்காரர் பரிசீலிக்கல... மத்திய உள்துறைக்கு அனுப்பி இருக்காருன்னு ஒரு தகவல் கிளம்ப... கிண்டிக்காரரை அரசியல் கட்சிங்க கிண்டி எடுத்துட்டாங்க... அமைச்சரவை பரிந்துரைத்தால் விடுதலை செய்ய வேண்டியதுதானே... அதைவிட்டுட்டு உள்துறைக்கு ஏன் அனுப்பி விளக்கம் கேட்கணும்... சுப்ரீம்கோர்ட் என்ன சொல்லிச்சு... நீங்களே முடிவு எடுக்கலாம்னுதானே சொல்லிச்சு.. அப்டி இருக்கும்போது உள்துறைக்கு மீண்டும் எப்டி ஆலோசனை கேட்டு அமைச்சரவை தீர்மானத்தை அனுப்பலாம்னு ஒரே கண்டனம்... எங்கே பார்த்தாலும் தாமரை கட்சியையும், கிண்டிக்காரரையும் வறுத்தெடுத்துட்டாங்க... இதுக்கெல்லாம் அந்த மைக் தலைவர்தான் காரணம்னு....’’ இழுத்தார் விக்கியானந்தா.
‘‘இங்க எங்க ஆளுங்கட்சிக்கு டோஸ் விழுந்தது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிண்டியில உள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தாமரை கட்சிக்காரங்க நேரடியாகவே கிண்டிக்காரர்கிட்ட இந்த விஷயத்தை போட்டு உடைச்சாங்களாம்... அதாவது, அமைச்சரவை முடிவு மேல கிண்டிக்காரர் என்ன நடவடிக்கை எடுக்கப்போறார் என்ற தகவல்தான் தமிழ்நாட்டுல ஹாட் டாபிக்... இதனால உங்க இமேஜ், கட்சி இமேஜ் எல்லாம் டேமேஜ் ஆயிடுச்சுனு சொன்னாங்களாம்... அதுவரை அமைதியாக கேட்ட கிண்டிக்காரர் கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராம்... கூப்பிடு அந்த அம்மாவை என்று தமிழகத்தின் உச்ச பெண் அதிகாரியை அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கினாராம்... மைக் தலைவரு சும்மா இல்லாம, தீர்மானத்தை அனுப்பிட்டோம்... நான்தான் லேட்டுக்கு காரணம்னு சொல்றாராம்... உண்மையிலேயே அவரு அமைச்சரா... இல்ல பப்ளிசிட்டிக்காக ஏதாவது சொல்றாரானு கேட்டு நேரடியாகவே எச்சரித்தாராம்... அதனால உச்ச அதிகாரி  ஆடிப்போனாராம். இது குறித்து சேலத்துக்கார் கிட்ட பேசி கிண்டிக்காரரின் கோபத்தை சொன்னாராம். இதையடுத்து மைக் தலைவர் இனி இதுபற்றி வாயே திறக்கக் கூடாது என்று சொன்னதாகவும் ஒரு தகவல் ஓடுது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சாப்பிட்டது தப்பாய்யா... என்று ஒரு கல்வி அதிகாரி ராத்திரியில தூங்கும்போது கூட புலம்பறாராம்... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்... மைக் நடிகரின் பெயர் கொண்ட பேரணாம்பட்டு வட்டார கல்வி அலுவலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரணாம்பட்டு பகுதியில் உள்ள பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது பள்ளி ஆசிரியர்கள், ஆய்வுக்கு சென்றதை அறிந்து தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த வகைவகையான அசைவ உணவு உட்பட பிரியாணி உள்ளிட்ட 15 உணவு வகைகளை சமைத்து கொண்டு வந்து அசத்திட்டாங்க... அவரும் கல்வி அதிகாரி என்பதை மறந்து கல்யாண சமையல் சாதம் இதுவே எனக்கு போதும் என்ற பாணியில் ஒரு புடிபுடிச்சுட்டாராம்... அதை ஒருத்தர் செல்போன்ல படம் எடுத்து ேபாட... அதுவே அவருக்கு எதிரா போயிடுச்சாம்... சாப்பிட்டது தப்பில்ல... ஆனால் சாப்பிட்டது தப்பே இல்லை என்று அதிமுக அனுதாபியும் ஆசிரியருமான ஒருத்தர் சப்போர்ட் செய்து இருக்காரு... எது எதுக்குதான் சப்போர்ட் பண்றது என்ற விவஸ்தையே இல்லாம போச்சு... இதுவே ஜெயலலிதா இருந்தா சாப்பாட்டுக்கு சப்போர்ட் பண்ண நபரான அழகின் அரசனாக பெயர் கொண்ட ஆசிரியரை என்ன சொல்லி இருப்பாங்கனு அவங்க கட்சிக்கு உள்ளேயே ஒரு பட்டிமன்றம் ஓடுது... அட விடப்பா முடிஞ்சபோன விஷயத்துக்கு நீ மீண்டும் ஓப்பனிங் கொடுக்காதே என் மானமே காற்றில் பறக்குதுன்னு புலம்பறாராம்... வீட்டுல மனைவியே பறிமாறினாலும் செல்போன்ல எதுவும் படம் எடுக்கலையேன்னு கேட்கும் நிலைக்கு மாறிட்டாராம்...’’ என்று சொன்னார் விக்கியானந்தா.
‘‘பிளஸ்2 தேர்வில் அதிரடி மாற்றம் ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடந் ஆண்டு அவசரகோலத்தில் பிளஸ் 1 பொதுத் ேதர்வு நடந்தது... இதன் அனைத்து புள்ளிவிவரங்களும் கல்வித்துறைக்கு வந்து இருக்காம்... அந்த புள்ளிவிவரப்படி பார்த்தால் 80 சதவீத மார்க்குகளை கூட அரசு பள்ளிகள் எட்டலையாம்... இந்த நிலையில ஒன்றிணைந்த மார்க்‌ஷீட் வழங்கினால் அரசு பள்ளிகளில் 80 சதவீதம் 1200க்கு 800க்கு மேலேயே தாண்டாதாம்... அதனால அந்த பிரச்னையை தீர்க்கவும் அரசுப் பள்ளி மாணவர்களை காப்பாற்றவும் 600 மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான அட்மிஷன் நடக்கும்னு அறிவிப்பு கல்வித்துறை சார்பா வெளி வந்து இருக்காம்... இந்த அறிவிப்பால பல பெற்றோர் ரொம்பவும் சந்தோஷத்தில் மிதக்கறாங்களாம்... மாணவர்கள் பறக்கறாங்களாம்...’’ என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு கிளம்பினார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SiberiaPolarBearStreet

  ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

 • RahulBirthday2k19

  கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

 • GrassBridgePeru

  ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

 • RoyalAscot2k19

  இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

 • BiharProtestBrainFever

  பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்