SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை மோடி தொடங்கி வைக்கிறார்

2018-09-16@ 00:37:02

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை வரும் 23ம் ேததி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் இருந்து 30 கிமீ தொலைவில் பாக்யாங்கில் மாநிலத்தின் முதல் விமான நிலையம் அமைக்கப்பட்டு, அதற்கான வெள்ளோட்டங்கள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டன. இந்த விமான நிலையத்தை வரும் 23ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க  உள்ளதாக மாநில தலைமை செயலாளர் ஏ.கே.வஸ்தவா நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “சிக்கிம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி 2வது முறையாக வரும் 23ம் தேதி வருகிறார். அப்போது, புதிய  விமான நிலையத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர், பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்” என்றார். வரும் 23ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படவுள்ள இந்த விமானநிலையம் அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து செயல்படும் என்றும் வஸ்தவா தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்