SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா வழியில் அரசியல் பயணம் தொடருவோம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

2018-09-16@ 00:20:14

சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: மொழிக்கு முதலானவர். இனத்துக்கு ஒளியானவர். நம் நாட்டுக்கே பெயர் சூட்டியவர்.
திமுக நிறுவனர் அண்ணாவின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் என்ற பொறுப்புடன் முதன்முறையாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நன்னாளில் அண்ணாவும், கலைஞரும் காட்டிய வழியில் திமுகவை கட்டிக் காக்கும் பணியில் உங்களில் ஒருவனாக ஓயாத உழைத்திடும் ஊக்கத்தைப் பெறுகிறேன். தமிழர்களின் அண்ணன் பிறந்த நாளில் அவரை வணங்கி நம் அரசியல் பயணம் தொடர்வோம்.

ஜனநாயக உரிமை காப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டர் பதிவு: சர்வதேச ஜனநாயக உரிமை நாளான இன்று (நேற்று) அரசியலமைப்புச் சட்டம் நமக்களித்த சுதந்திரத்தையும், உரிமையையும் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். சமூக ஆர்வலர்களை அடக்குவதற்கும், ஜனநாயக உரிமைகளை நீர்த்துப் போக செய்வதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கருத்து சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை சர்வதேச ஜனநாயக உரிமை நாளான இன்று நாம் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்