SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சர்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சென்னை சிறுவன்

2018-09-15@ 21:32:44

சென்னை : பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சென்னை சிறுவனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு இடையேயான சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றன.இந்தப் போட்டியில்  சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தவிஷ் என்ற 5 வயது சிறுவன் பங்கேற்று விளையாடினான். பல்வேறு ரவுண்டுகள் கொண்ட சுற்றில் தேர்வான  தவிஷ்  இறுதியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றான். வெற்றி பெற்ற சிறுவன் நேற்று சென்னை திரும்பினான். விமானநிலையத்தில் சிறுவன் தவிஷூக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதே போல பெல்ஜியத்தின் ஒசாண்டேவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்கேட்டிங்கிற்கான ஃபிளான்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் பங்குபெற்ற இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குரு ஹர்ஷன் எனும் 8 வயது சிறுவன் முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்