SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோல்வி அடைந்தாலும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளோம் : விராட் கோலி

2018-09-15@ 20:39:29

ஓவல்: இங்கிலாந்து  இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என இழந்தது. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த டெஸ்டில் 20 வயதே ஆன இங்கிலாந்து வீரர் சாம் குர்ரான் சிறப்பாக பந்து வீசியும், விக்கெட்டை கைப்பற்றியும் இந்திய தோல்விக்கு காரணமானார். சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இந்தியா 60 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த டெஸ்டிலும் முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியும் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.

.இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் : நாங்கள் மிகவும் மோசமாக தோல்வியடைந்தோம் என்று நான் கட்டாயம் கூறமாட்டேன். ஆனால் நாங்கள் போராடினோம். இங்கிலாந்துக்கான தொடர் நாயகன் விருதை தேர்வு செய்ய என்னிடமும்  மற்றும் விராட் கோலியிடமும்  கேட்டுக்கொண்டார்கள். இருவருமே சாம் குர்ரானை தேர்வு செய்தோம். குர்ரான்தான் எங்களை அதிக அளவில் காயப்படுத்திவிட்டார். அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது என்றார். விராட் கோலி  கூறியதாவது :  எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதை நாங்கள் தவறவிட்டோம்.

ஏற்கனவே கோப்பை உறுதி என்பதால் இங்கிலாந்து அணி எவ்வித அச்சமும் இன்றி விளையாடிது. அதுவே அவர்கள் வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமைந்தது. இந்தத் தொடரில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளோம். வெற்றிக்காக போராடிய இளம் வீரர்களான பண்ட் மற்றும் ராகுல் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்தப் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் குக் விடைபெற்றுள்ளார். அவரை பற்றி நான் ஒரே வரியில் கூறுகிறேன் ‘அவர் சிறப்பான கிரிக்கெட் வீரராக திகழ்ந்துள்ளார்’. அவரது எதிர்காலம் பிரகாசிக்க எனது வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்