SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மானம் மரியாதையை அடமானம் வைத்துவிட்டு தமிழகத்தில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

2018-09-15@ 19:39:51

விழுப்புரம்: ஆண்டுதோறும் ஜுன் 3-ம் நாள் தமிழ் செம்மொழி நாள் என அழைக்கப்படும் என்று விழுப்புரத்தில் நடைபெற்று வரும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக சார்பில் ஆண்டுதோறும் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்றும், கலைஞர் அறக்கட்டளை சார்பில் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கட்சியின் நிறை, குறைகளை யார் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கூறலாம் என்று தெரிவித்த ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட திமுகவில் ஒவ்வொரு தொண்டனும் உறுதியேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வரை ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை என்று ஸ்டாலின் சூளுரைத்தார். மானம் மரியாதையை அடமானம் வைத்துவிட்டு தமிழகத்தில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழலோ ஊழல் என்று கடுமையாக சாடினார். மத்திய பாஜக அரசுக்கு அதிமுக அரசுக்கு பல்லக்கு தூக்கி கொண்டு இருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றுனீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். கடந்த மக்களவை தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்