SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று ராகுல்காந்தி கனவு காண்கிறார் : அமித் ஷா

2018-09-15@ 19:14:04

தெலங்கானா: தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று ராகுல்காந்தி கனவு காண்கிறார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் மெகபூப் நகரில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் அமித் ஷா முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் காங்கிரசால் அவமதிக்கப்பட்டதை தெலங்கானா மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று தெரிவித்தார்.

வரும் மே மாதம் தேர்தல் நடந்தால் ஆட்சியமைக்க முடியும் என்ற நம்பிக்கை சந்திரசேகர ராவுக்கு இல்லையா? என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

மே மாதம் தேர்தல் நடந்தால் வெல்ல முடியாது என்றால் நவம்பர், டிசம்பரில் தேர்தல் நடந்தாலும் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்தார். நாடாளுமன்றம், பேரவை தேர்தலை ஒன்றாக நடத்தினால் செலவு குறையும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார் என்று அமித் ஷா தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்