SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சிபுரம் அருகே அமெரிக்க பெண் பலாத்காரம் : 3 ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை

2018-09-15@ 18:51:50

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் அமெரிக்க பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை வேளச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் விமல். இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவை சேர்ந்த கெலாவை (26) திருமணம் செய்தார். இந்த நிலையில், கெலா அரைகுறை ஆடையுடன் காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் புலம்பிக்கொண்டிருந்தார். அப்பகுதி மக்கள், கொடுத்த தகவல்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் கெலாவை அங்கிருந்து மீட்டனர். அவர் சுயநினைவில்லாமல் போதையில் இருந்துள்ளார். போதை தெளிந்தபிறகு விசாரணை நடத்தினர்.

அப்போது, சென்னை வேளச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் கணவர் விமலுடன் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் அடிக்கடி போதைப்பொருளை பயன்படுத்துவதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கணவன் விமல் தற்போது வேலை இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் தனது அமெரிக்க மனைவியை காரில் அழைத்துக்கொண்டு வந்து நடு ரோட்டில் நிறுத்தி இறக்கிவிட்டு விட்டு சென்றுள்ளார்.

அமெரிக்க இளம் பெண் கெலா போதையில் இருந்ததை  நோட்டமிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை பலாத்காரம் செய்ய மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று   பாலியல் பலாத்காரம் செய்து விட்டு காஞ்சிபுரம் வெள்ள கேட் அருகே விட்டு விட்டு சென்றதாக தெரியவந்துள்ளது.  அமெரிக்க பெண் ஆடை கிழிந்த நிலையில் நடு ரோட்டில் நின்று கொண்டு ஆங்கிலத்தில் தான் பாதித்தது பற்றி அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்க பெண்ணை ஆட்டோ ஓட்டுனர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் யார் என போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இதுபற்றி டெல்லியில் உள்ள தூதரகத்திற்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில், வெள்ளைகேட் பகுதியை சேர்ந்த 3 ஆட்டோ டிரைவர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்