SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்த முயன்ற இளம்பெண் கைது: போலீசார் விசாரணை

2018-09-15@ 03:52:39

சென்னை: எழும்பூர் அரசு மருத்துவமனையில் 8 மாத குழந்தையை கடத்தி செல்ல முயன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (28). இவருக்கு மனைவி சோனியா மற்றும் 8 மாத ஆண் குழந்தை உள்ளனர். குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததால் கடந்த வாரம் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். தாய் சோனியா உடனிருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பிய போது படுக்கையில் இருந்த குழந்தை மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த சோனியா கதறி அழுதார். சத்தம் கேட்டு அருகில் இருந்த ஊழியர்கள் ஓடிவந்தனர்.

அப்போது, எனது குழந்தையை காணவில்லை என்று கூறினார். உடனே ஊழியர்கள் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, ஒரு இளம்பெண் குழந்தையை லிப்ட்டில் தூக்கிக்கொண்டு செல்வதை பார்த்த போலீசார், அவரை பிடித்தனர். அவரிடமிருந்து குழந்தையை மீட்டு, தாய் சோனியாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் குழந்தையின் பெற்றோர் சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் பிடிபட்ட இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் புரவைசாக்கம் திடீர் நகரைச் சேர்ந்த நந்தினி(30) என்பது தெரிந்தது.

இவரின் குழந்தையும் உடல்நல குறைவால் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்திருப்பது தெரியவந்தது. குழந்தை நீண்ட நேரம் அழுததால், நான் குழந்தையை தூக்கி அழுகையை நிறுத்துவதற்காக  லிப்ட்டிற்கு கொண்டு வந்தேன் என்று தெரிவித்தார். ஆனால் போலீசார் குழந்தையை கடத்தியதாக நந்தினியை கைது செய்தனர். இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்