போலீஸ் ஏட்டுவிடம் செல்போன் பறிப்பு
2018-09-15@ 03:50:47

சென்னை: சென்னை திரு.வி.க.நகர் ஏழுமலை தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (54). திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். இவர், நேற்று காலை ராயபுரம் மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, 2 பேர் விபத்தில் சிக்கியது போல் சாலையில் விழுந்து கிடந்தனர். இதை பார்த்த அவர், பைக்கை நிறுத்திவிட்டு அவர்களின் பக்கத்தில் சென்று பார்த்தார். உடனே அவர்கள், பாலசுப்பிரமணியிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர்.
அதிர்ச்சியடைந்த அவர், இருவரையும் துரத்தி சென்று ஒருவரை மடக்கி பிடித்தார். விசாரணையில், கார்த்திக் (30) என்பதும், திருமண மண்டபங்களில் துப்புரவு வேலை செய்வது, வேலை இல்லாத நேரத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் பட்டினப்பாக்கம் திருமண மண்டபத்தில் பதுங்கி இருந்த சேலம் அடுத்த ஆத்தூரை சேர்ந்த சதீஷ் (19), திருச்சியை சேர்ந்த டேனியல் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
கடப்பா மாவட்ட வனப்பகுதியில் செம்மரம் கடத்த முயன்றவர் கைது: 10 லட்சம் மதிப்பு கட்டைகள், கார் பறிமுதல்
நெல்லை மாநகராட்சியில் பகீர் மின்கட்டணத்தில் நூதன மோசடி அதிகாரி உட்பட 5 பேர் சஸ்பெண்ட்: 70 லட்சம் வரை சுருட்டியதாக புகார்
சேடப்பட்டி அருகே மாணவிகளிடம் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியருக்கு அடி, உதை
கோவையில் கூரியர் பார்சலில் அனுப்பிய 725 பவுன் நகை கொள்ளையில் பெண் ஊழியர் உட்பட 6 பேர் கைது: தனிப்படை போலீஸ் மடக்கியது
மாணவர்கள் மோதலுக்கு பழிவாங்கல் : குறி தவறி அப்பாவி படுகொலை
திருட்டு நகைகளை விற்க முயன்ற 3 பேர் கைது
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!