SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தென் ஆப்ரிக்க அணியில் மீண்டும் டேல் ஸ்டெயின்

2018-09-15@ 03:29:55

ஜோகன்னஸ்பர்க்: ஜிம்பாப்வே அணியுடன் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான தென் ஆப்ரிக்க அணியில், அனுபவ வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் மீண்டும் இடம் பிடித்துள்ளார். தென் ஆப்ரிக்கா - ஜிம்பாப்வே அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்ரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வந்த வேகப் பந்துவீச்சாளர் டெஎல் ஸ்டெயின் (35 வயது), இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக 2016 அக்டோபரில் ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்த ஸ்டெயின, தற்போது நல்ல உடல்தகுதியுடன் அணிக்கு திரும்பியுள்ளதுடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

டேவிட் மில்லர், குவின்டான் டி காக் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தோள்பட்டை காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த டு பிளெஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் இவர் தனது உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே களமிறங்க முடியும் என தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.ஜிம்பாப்வே அணியுடன் நடக்க உள்ள டி20 போட்டிகளுக்கான தென் ஆப்ரிக்க அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணி: டு பிளெஸ்ஸி, ஹாஷிம் அம்லா, ஜீன் பால் டுமினி, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், இம்ரான் தாஹிர், கிறிஸ்டியன் ஜான்கர், ஹெய்ன்ரிச் கிளாசன், கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி என்ஜிடி, பெலுக்வாயோ, காகிசோ ரபாடா, டாப்ரைஸ் ஷம்சி, டேல் ஸ்டெயின், கயா ஸோண்டோ.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்