SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு காசோலை: முதல்வர் வழங்கி வாழ்த்தினார்

2018-09-15@ 03:26:27

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்தினார். இந்தோனேசியாவில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய குழுவில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர், வீராங்கனைகள் பலர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ரொக்கப்பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், 12 சாதனையாளர்கள் மற்றும் 11 பயிற்சியாளர்களுக்கான பரிசுகளை முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தடகளத்தில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் மற்றும் 4X400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தருணுக்கு 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், பெண்களுக்கான ஸ்குவாஷ் குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், பெண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற தீபிகா கார்த்திக் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா ₹50 லட்சம், ஆண்களுக்கான ஸ்குவாஷ் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரிந்தர் பால் சிங்குக்கு ₹20 லட்சம், ஆண்கள் பாய்மர படகு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகியோருக்கு தலா ₹20 லட்சம்,

ஆண்கள் குழு மற்றும் கலப்பு இரட்டையர் மேசைப்பந்து போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சரத்கமலுக்கு ₹40 லட்சம்,, ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் குழு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சத்யன் மற்றும் அமல்ராஜ் ஆகியோருக்கு தலா ₹20 லட்சம், ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ருபீந்தர் பால் சிங் மற்றும் ஸ்ரீஜேஷ் ஆகியோருக்கு தலா ₹20 லட்சம், மகளிர் பாய்மரப் படகு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வர்ஷா கவுதமுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலை என மொத்தம் 3 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும், பயிற்சியாளர்கள் ராமச்சந்திரன், குன்ஹி முகமது, அழகேசன், பார்த்திபன், பாலமுருகன், சீனிவாசராவ், முரளிதரராவ், ராமன், அந்தோணி அற்புதராஜ், ஹர்மன் பிரீத்சிங், ஷான் ஆகியோருக்கு 51 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உட்பட பலர் கலந்து கொண்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்