SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் பெட்ரோல் ரூ.5.23 டீசல் ரூ.5.87 எகிறியது

2018-09-15@ 02:35:10

* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்கின்றன.
* டீசல் கமிஷன் போக ஏறக்குறைய பாதி வரிகளாகவே உள்ளன. மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே விலை தானாக குறைந்துவிடும்.


புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை நேற்றும் அதிகரித்தது. சென்னையில் பெட்ரோல் ₹84.49க்கும், டீசல் ₹77.49க்கும் விற்கப்பட்டது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் பெட்ரோல்  ₹5.23 டீசல் ₹5.87 உயர்ந்துள்ளது. தினசரி விை நிர்ணயம் அமலுக்கு வந்த பிறகு இந்த அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கவில்லை.கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றும் விலை அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசு உயர்ந்து ₹84.49ஆகவும், டீசல் 24 காசு உயர்ந்து ₹77.49ஆகவும் இருந்தது. இதுபோல் பெட்ரோல் டெல்லியில் ₹81.28, மும்பையில் ₹88.67, எனவும், டீசல் டெல்லியில் ₹73.30க்கும், மும்பையில் ₹77.82க்கும் விற்பனை செய்யப்பட்டது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதுபோல், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனால்தான் ஆகஸ்ட் மத்தியில் இருந்தே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.  சர்வதேச கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு போன்றவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணய முறை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்ததில் இருந்து கடந்த மாதம் போல ஒரு போதும் மாதாந்திர பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லை. சென்னையில் மட்டும் கடந்த ஒன்றரை மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ₹5.23, டீசல் ₹5.87 அதிகரித்துள்ளது.  ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து நேற்று வரை ஒரு மாதத்தில் பெட்ரோல் ₹4.35,  டீசல் ₹4.90 உயர்ந்துள்ளது.  நகரங்களில் அந்தந்த மாநில வாட் வரி மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு ஏற்ப விலை மாறுபடும்.

அம்புட்டும் வரிதான்... (டெல்லி விலை)
    பெட்ரோல்    டீசல்
பெட்ரோல்
அடிப்படை விலை    ₹40.45    ₹44.28
மத்திய அரசு வரி    ₹19.48    ₹15.33
டீலர் கமிஷன்    ₹3.64    ₹2.52
மாநில வாட் வரி    ₹17.16    ₹10.70
விற்பனை விலை    ₹80.73    ₹72.83


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்