SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஞ்சு விலை தொடர் உயர்வு எதிரொலி விலை சரிவால் ₹150 கோடி நூல் தேக்கம்

2018-09-15@ 02:33:02

கோவை:பஞ்சு விலை கடந்த 6 மாதமாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாதிக்கப்பட்டு வந்த தமிழக நூற்பாலைகள், கடந்த ஒரு மாதமாக நலிவை சந்தித்துள்ளன. நூல் விலை சரிவால் நஷ்டத்திற்கு விற்க முடியாமல் ரூ.150 கோடி நூல் தேக்கமடைந்துள்ளன.  இது குறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சிஸ்பா) தலைவர் ரங்கராஜன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள குறு, சிறு நூற்பாலைகளில் ஒரு நாளைக்கு 7.50 லட்சம் கிலோ பஞ்சு மூலம் ரூ.10 கோடி மதிப்பிலான 5 லட்சம் கிலோ நூல் உற்பத்தியாகிறது. மில்களுக்கு தேவையான பஞ்சு விலை கடந்த ஏப்ரலில் ஒரு கண்டி (170 கிலோ) ரூ.38 ஆயிரமாக இருந்தது. இது 3 மாதத்தில் ரூ.48 ஆயிரமானது. பின்னர் கடந்த 2 மாதத்தில் இதன் விலை ரூ.52 ஆயிரமாகியது. கடந்த 5 மாதத்தில் ஒரு கண்டிக்கு ரூ.15 ஆயிரம் அதிகரித்துள்ளது.  தற்போது பஞ்சு சீசன் முடியும் நிலையில் உள்ளதால், வியாபாரிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பருத்தி விலையை அதிகரித்து செல்கின்றனர். இதனால் தினசரி 3 ஷிப்ட் பணியில் ஒரு ஷிப்ட் மற்றும் வாரத்தில் ஒரு நாள் கட்டாய உற்பத்தி நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நூல் உற்பத்தி கடந்த ஒரு மாதத்தில் 40 சதவீதம் குறைந்துள்ளது.

பஞ்சு விலை உயர்விற்கேற்ப மில்களில் உற்பத்தியாகும் நூல்களுக்கு விலை உயரவில்லை. இதனால் நஷ்டத்திற்கு விற்காமல் ரூ.150 கோடி நூல் தேக்கமடைந்துள்ளது. குறு, சிறு நூற்பாலைகள் பஞ்சு கொள்முதலுக்கும், நூல் உற்பத்திக்கும் தேவையான நிதி ஆதாரத்திற்கு கடன் வாங்கி, வட்டி செலுத்தி கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. நிலைமை மோசமாக நீடிப்பதால், நூற்பாலைகள் நலிவடைந்து வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.  இத்தகைய பிரச்னைக்கு அடிப்படை காரணமாக உள்ளது பஞ்சு விலை தான். பருத்தி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் வகுக்க வேண்டும், பஞ்சு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்