SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்கா மிரட்டலுக்கு பணிந்தது இந்தியா? இனி பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பே இருக்காது

2018-09-15@ 02:32:06

புதுடெல்லி: ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியை பாதியாக குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் 2வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நாள் ஒன்றுக்கு 6,58,000 பேரல் என்ற அளவில் ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. செப்டம்பர் மற்றும் அக்டோபரில் இதை நாள் ஒன்றுக்கு 3,60,000 முதல் 3,70,000 பேரல் என குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே 2015ம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக கூறி அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் டிரமப் கடந்த மே மாதம் அறிவித்தார். பின்னர் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. வரும் நவம்பரில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் மீதும் பொருளாதார தடை வருகிறது. ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்த வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வந்தது. இதையடுத்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை முழுவதுமாக நிறுத்தப்பட்டு விடும் என தெரிகிறது. ஈரான் கச்சா எண்ணெயால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஓரளவு சமாளிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்