SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் விளைச்சல் பாதிப்பு : மிளகு கிலோ ரூ.550ஆக உயர்வு

2018-09-15@ 02:31:06

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் மிளகு விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் விலை உயர்ந்து கிலோ ₹550க்கு விற்கப்படுகிறது.இந்தியாவில் கேரளா மாநிலம் குமுளி, தாண்டிக்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், தமிழகத்தில் போடிமெட்டு, குரங்கணி, முதுவாக்குடி, பிச்சாங்கரை, ஏற்காடு, கொல்லிமலை, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. இவை அறுவடை செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் கேரளாவில் பெய்த கனமழையால் கேரளா மற்றும் தமிழகத்தில் போடி, மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் மிளகு செடிகள் அழிந்துவிட்டன. இதன் காரணமாக மிளகு விலை அதிகரித்துள்ளது. இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை மளிகை வியாபாரிகள் கூறுகையில், ‘கேரளாவில் பெய்த கனமழையால், அங்கு மிளகு விளைச்சல் 80 சதவீதம் சரிந்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து 20 சதவீத மிளகு தான், விற்பனைக்கு வருகிறது. இதனால் கடந்த மாதத்தைவிட, நடப்பு மாதத்தில் மிளகு விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ₹400 க்கு விற்ற ஒரு கிலோ மிளகு, தற்போது ₹150 உயர்ந்து ₹550க்கு விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2019

    22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்