SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐபோன் இரட்டை சிம் போன் இந்தியாவுக்கு எப்போது வரும்?

2018-09-15@ 02:30:06

புதுடெல்லி: இரட்டை சிம்கார்டு வசதியுடன் கூடிய ஐபோன் மாடல்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.சர்வதேச சந்தைகளை கலக்கி வந்த ஆப்பிள் நிறுவனம், சமீப காலமாக இந்திய சந்தையின் பக்கம் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. பிற நாட்டு சந்தைகளில் விற்பனை குறைந்தபோதும் இந்திய சந்தையில் விற்பனை சிறப்பாக இருந்ததே இதற்கு காரணம். இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் இரட்டை சிம் மொபைல் பிரபலமாக உள்ளது. இதனால்தான் ஐபோன் ரசிகர்கள் கூட இரட்டை சிம் கார்டு உள்ள காரணத்துக்காகவே ஆன்டிராய்டு மொபைலை வாங்குகின்றனர்.இந்த நிலையை மாற்றும் வகையில், இரட்டை சிம்கார்டு வசதி கொண்ட ஐபோன் எக்ஸ்எஸ், எக்ஸ்எஸ் மேக்ஸ், எக்ஸ்ஆர் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை இரட்டை சிம் வசதி கொண்டவை. சிம் கார்டுகள் மதர்போர்டுடன் பதிக்கப்பட்டவை. அவற்றை அகற்ற முடியாது.

 ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் 64ஜிபி ₹1,09,900 256 ஜிபி ₹1,24,900, 512 ஜிபி ₹1,44,900 எனவும், ஐபோன் எக்ஸ்எஸ் 64ஜிபி ₹99,900, 256 ஜிபி ₹1,14,900, 512 ஜிபி ₹1,34,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் எக்ஸ்ஆர் 64 ஜிபி ₹76,900, 128 ஜிபி ₹81,900, 256ஜிபி ₹91,900 என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை வரும் 28 முதல் விற்பனைக்கு வரும். ஐபோன் எக்ஸ் ஆர் மாடலுக்கு அக்டோபர் 19 முதல் முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 26 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல்  ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஆரம்ப விலை ₹40,900 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2019

    22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்