SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பந்தல், கட்டிட வேலைக்கு இரும்புக் குழாய் பயன்படுத்துவதால் சவுக்கு மரங்களின் விலை வீழ்ச்சி

2018-09-15@ 02:27:51

கும்பகோணம்: பேப்பர் உற்பத்தி குறைந்ததாலும், கட்டிடவேலைக்கு இரும்பு குழாய்கள், ராடுகள் வந்ததால் சவுக்கு  மரத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் கரையான நீரத்தநல்லுார், தேவானாஞ்சேரி, சோழபுரம், அணக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் சவுக்கு மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சவுக்கு மரம் பதியம் போட்ட பிறகு வளரும் வரை தண்ணீர் விட்டால் போதுமானது, அதன் பின் தானாகவே வளர்ந்து விடும். இதனால் ஆட்கள் கூலியும், பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் பெரும்பாலான விவசாயிகள் சவுக்கு மரம் சாகுபடி செய்தனர். பேப்பல் மில்களுக்கும், ரியல் எஸ்டேட் விறுவிறுப்பாக இருந்தபோது சாரம் கட்டுவதற்கும் மரங்களை வெட்டி நல்ல விலைக்கு விற்றனர்.

இந்நிலையில் கோயம்புத்துார், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேப்பர் மில்லில் பேப்பர் உற்பத்தி குறைந்தது.   கட்டிடவேலைக்கும், , திருமணம் மற்றும் கோயில் திருவிழாக்களில் பந்தல் போடுவதற்கும் இரும்பு குழாய்கள்,  இரும்பு ராடுகளையும் பயன்படுத்த துவங்கினர். இதனால்  சவுக்கின் தேவைகள் பெருமளவில் குறைந்தது.
இதனால் வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்ய வருபவர்கள் விலையை வெகுவாக குறைந்து விட்டார்கள். இதனால் கடந்த ஆண்டு ₹2.50 லட்சத்துக்கு விற்பனையான ஒரு ஏக்கர் சவுக்கு மரங்கள்   இந்தாண்டு ₹75 ஆயிரமாக குறைந்துவிட்டது

இதுகுறித்து சவுக்கு விவசாயம் செய்யும் சின்னப்பிள்ளை கூறுகையில், ‘சவுக்கு பதியம் போட்டு சில நாட்கள் பராமரித்தால் போதும், அதன் பின் தானாகவே வளர்ந்து விடும், கொள் முதல் செய்ய வருபவர்கள்  மரத்தின் உச்சியில் 2 இன்ச் இருந்தால் தான் மரத்தை வாங்குவார்கள். ஒரு சவுக்கு மரம் இரண்டரை இன்ச் வளர்வதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகும். கடந்தாண்டில் ஒரு ஏக்கர் சவுக்கு மரத்திற்கு ₹2.50 லட்சம் கொடுத்து வாங்கி சென்றனர். இந்தாண்டு ₹75 ஆயிரத்திற்கு தான் மரத்தை வாங்குகிறார்கள்’’ என்றார்.
நாங்களும் சவுக்கு மரத்தின் விலை மேலும் குறைவதற்குள் மரங்களை விற்பனை செய்து விட வேண்டும் என கொடுத்து வருகின்றோம். சவுக்கு மரத்தின் விலை வீழ்ச்சி காரணமாக வரும் ஆண்டுகளில் இப்பகுதியில் 50 சதவீதம் பேர் சவுக்கு மர சாகுபடியை விட்டு விட்டு வேறு விவசாய தொழிலுக்கு மாறவுள்ளனர். இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்