SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் 3 மணிநேரம் மறியல்

2018-09-15@ 01:57:35

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் 3 மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கால்வாய் மூலம் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பயன் பெறுகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக மதுரை மாவட்டம், மேலூர் பிரிவில் ஒருபோக சாகுபடிக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன ஒருபோக சாகுபடிக்கு கடந்த ஆக. 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட 10 நாட்கள் கழித்து சிவகங்கை மாவட்டத்திற்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை.

இதை கண்டித்து சிவகங்கை அருகே மலம்பட்டியில் நேற்று பெரியாறு பாசன விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் முத்துராமலிங்கம் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இவர்களிடம் டிஆர்ஓ லதா, ஆர்டிஓ செல்வகுமாரி, தாசில்தார் ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, மேலூர் பிரிவில் மலம்பட்டியில் இருந்து தமறாக்கி வரை லெஸ்சிஸ் கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் 19ம் தேதியன்று அனைத்து கால்வாய்களிலும் பெரியாறு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகளிடம் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை சார்பில் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதன்பின், அனைவரும் கலைந்து சென்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய மறியல் பகல் 1 மணி வரை நீடித்ததால் பரபரப்பு நிலவியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்