SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாம்பன் பாலம், கடல் ட்ரோனில் படம் பிடிப்பு : ஆந்திராவை சேர்ந்தவருக்கு வலை

2018-09-15@ 01:56:45

ராமேஸ்வரம்:பாம்பன் பாலம், கடல் பகுதியை அனுமதியின்றி ட்ரோன் மூலம் படம் எடுத்த நபர் குறித்து புலனாய்வுத்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் சாலைப்பாலத்தில் நேற்று மாலை 5.20 மணியளவில் ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட டூவீலரில் வந்த ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நபர், தன்னிடம் இருந்த ட்ரோன் விமானம் மூலம் பாம்பன் பாலத்தை படம் எடுக்க துவங்கினார். பாம்பன் ரயில் மற்றும் சாலைப்பாலத்தில் பாம்பன் முனையில் இருந்து மண்டபம் வரை கடல் மேலே ட்ரோனை பறக்கவிட்டு சட்டத்திற்கு புறம்பாக படம் பிடித்தார்.சுமார் 20 நிமிடங்கள் கேமராவை பறக்கவிட்டு படம் எடுத்துக்கொண்டிருந்த அவரிடம் விசாரித்தபோது, எதுவும் கூறா மல் சென்றுவிட்டார். பறக்கும் கேமராவில் கடலின் மேல் பறக்கவிட்டு படம் எடுத்ததை சுற்றுலாப்பயணிகள் அனைவரும் பார்த்து சென்றனர். பாம்பன் பாலத்தில் பறக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் படம் பிடித்தவர் குறித்து புலனாய்வுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.ட்ரோன் மூலம் படம் பிடிப்பதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும். ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாம்பன் ரயில் மற்றும் சாலைப்பாலம், கலங்கரை விளக்கம், தூர்தர்ஷன் தொலைக்காட்சி மையம், கடற்படை முகாம், தனுஷ்கோடி கடலோர பகுதிகள், மண்டபத்திலுள்ள கடலோர காவல்படை முகாம் உள்ளிட்ட பகுதிகளை ட்ரோன் மூலம் படம் பிடிக்க தடை உள்ளது.  இருந்தும் பலர் எவ்வித அனுமதியுமின்றி படம் பிடிப்பதும்,  போலீசார் விசாரணை செய்து அனுப்புவதும் வழக்கமாக உள்ளது. இனியாவது போலீசார் இவ்வாறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்