SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநியில் கொங்கு சேர மன்னர்களின் அரிய நாணயம் கண்டெடுப்பு

2018-09-15@ 01:55:56

பழநி: கொங்கு சேர மன்னர்களின் அரியவகை நாணயம் பழநியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநியில் கொங்கு சேர மன்னர்களின் நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இதனை கண்டறிந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, நாணய சேகரிப்பாளர் சுகுமார்போஸ் ஆகியோர் கூறியதாவது:செம்பினாலான இந்த நாணயம்  3.200 கிராம் எடை, 1 செமீ குறுக்களவுடன், ஒழுங்கற்ற வடிவத்தில் உள்ளது. நாணயத்தின் முன்புறம் கொங்கு சேர அரசின் முத்திரை, இடது கோடியில் வில்லும், அதற்கடுத்து யானை, பனைமரம் பொறிக்கப்பட்டுள்ளது. இவை மூன்றுமே பண்டைய கொங்கு சேர அரசின் முத்திரைகளாகும். நாணயத்தின் மேல்புறம், இடது, வலது ஓரங்களில் விளக்குகள் உள்ளன. ஓரங்களில் 8 வட்டபுள்ளிகள் உள்ளன.

சேர நாட்டையும் (தற்போதைய கேரளம்), தமிழகத்தின் கொங்கு பகுதிகளையும் ஆண்டு வந்த சேர அரசர்கள் கொங்கு சேரர்கள் என அழைக்கப்பட்டனர். சங்ககால சேரர்களின் வழியிலும், தமிழகத்தின் பாண்டிய, சோழ, ஆயை மன்னர்களின் ரத்தக்கலப்புகளின் வழியிலும் வந்த கொங்கு சேர மன்னர்களின் நாணயங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. பொதுவாக கொங்கு சேர மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் யானை உருவம் பொறிக்கப்படாது. அதனால் இந்த நாணயம் கிடைத்திருப்பது அரியதாகும்.இந்த நாணயம் எந்த மன்னரின் ஆட்சிகாலத்தில் வெளியிடப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். கிபி 14ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொடுங்களூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த ரவிவர்ம குலசேகர பெருமானின் காசாக இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்