SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நெய்வேலி அருகே நேருக்கு நேர் லாரிகள் மோதி விபத்து - 3 பேர் பலி

2018-09-15@ 01:53:57

நெய்வேலி,:  நாமக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் மாலை கோழிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கடலூர் நோக்கி வந்து ெகாண்டிருந்தது. அதேபோல் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இருந்து பழுப்பு நிலக்கரி ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.நேற்று அதிகாலை 3 மணியளவில் நெய்வேலி-விருத்தாசலம் இடையே அரசக்குழி என்ற இடத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் டிரைவர்கள் குறிஞ்சிப்பாடி பழனிவேல்(40), அரியலூர் மகாலிங்கம்(49), நிலக்கரி லாரி லோடுமேன் குறிஞ்சிப்பாடி அடுத்த பொட்டைவெளி கிராமத்தை சேர்ந்த பாபு( 22) மூன்று பேரும் பலியாகினர். மேலும் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சரத் (28), வடலூர் ஆபத்தாரணபுரம் பிரிதிவிராஜ் (23) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே மோதிய வேகத்தில் கோழிகள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனால் 500 கோழிகள் கருகி இறந்தன.  தகவலின்பேரில் நெய்வேலி தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். ஊ.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்